விண்டீஸ் ‘திரில்’ வெற்றி

Spread the love

கிங்ஸ்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் விண்டீஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. 

விண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 217, விண்டீஸ் 253 ரன் எடுத்தன. நான்காவது நாளில் இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 203 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. விண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.

பின் 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய விண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (2), பாவெல் (4) ஏமாற்றினர். போனர் 5, சேஸ் 22 ரன் எடுத்தனர். பிளாக்வுட் 55 ரன் எடுத்து கைகொடுத்தார். ஹோல்டர் 16 ரன்னில் கிளம்ப, விண்டீஸ் அணி 114/7 ரன் என திணறியது. கைவசம் 3 விக்கெட் மட்டும் உள்ள நிலையில் வெற்றிக்கு 54 ரன் தேவைப்பட்டன. 

கைகொடுத்த ரோச் 

கடைசி நேரத்தில் ஜோசுவா 13 ரன் எடுக்க, கீமர் ரோச், வாரிகன் இணைந்து வெற்றிக்கு போராடினர். வாரிகன் (6) ஏமாற்றிய போதும், பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்த ரோச், அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். விண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்து, 1 விக்கெட்டில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ரோச் (30), ஜேடன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். 

தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், 20ம் தேதி இதே மைதானத்தில் துவங்குகிறது. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: