விண்டீஸ் அணி முன்னிலை: பாகிஸ்தான் பவுலர்கள் ஏமாற்றம்

Spread the love

கிங்ஸ்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விண்டீஸ் அணி முன்னிலை பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன் எடுத்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த விண்டீஸ் அணியின் ராஸ்டன் சேஸ் (21), ஜெர்மைன் பிளாக்வுட் (22) நிலைக்கவில்லை. கைல் மேயர்ஸ் ‘டக்–அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ஜேசன் ஹோல்டர் (58), கேப்டன் கிரெய்க் பிராத்வைட் (97) அரைசதம் கடந்தனர். கீமர் ரோச் (13) ஏமாற்றினார். இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்து, 34 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த விண்டீசின் ஜோமல் வாரிகன் (1) ஏமாற்றினார். ஜோஷுவா டா சில்வா (21) ஆறுதல் தந்தார். முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 253 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் ஷா அப்ரிதி 4, முகமது அபாஸ் 3 விக்கெட் கைப்பற்றினர்.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் அணி, உணவு  இடைவேளையின் போது 2 விக்கெட்டுக்கு 56 ரன் எடுத்திருந்தது. அபித் அலி (31) அவுட்டாகாமல் இருந்தார். விண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: