விண்டீஸ் அணி திணறல் * பவத் ஆலம் சதம்

Spread the love


கிங்ஸ்டன்: இரண்டாவது டெஸ்டில் விண்டீஸ் அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. பவத் ஆலம் சதம் அடித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற விண்டீஸ் அணி 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது.

பவத் சதம்

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. முகமது ரிஸ்வான் 31 ரன்னுக்கு அவுட்டானார். பகீம் அஷ்ரப் 26 ரன் எடுத்தார். முதல் நாளில் 76 ரன்னுடன் ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் வெளியேறிய பவத் ஆலம், நேற்று மீண்டும் களமிறங்கினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த இவர் டெஸ்ட் அரங்கில் 5 வது சதம் அடித்தார். 

ஹசன் அலி (9), ஷகீன் அப்ரிதி (19) அடுத்தடுத்து அவுட்டாக, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 302 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பவத் ஆலம் (124), அபாஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். விண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஜேடன் சியலெஸ் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

திணறல் துவக்கம்

அடுத்து களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு பாவெல் (5), கேப்டன் பிராத்வைட் (4) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ராஸ்டன் சேசும் (10) நீடிக்கவில்லை. நான்காவது நாளில் விண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து 179 ரன் பின்தங்கி இருந்தது. 

Advertisement

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: