வாழ்வாதார சிரமத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகை வழங்குங்கள்! – உதயன்

Spread the love


வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு அரசாங்கத்தை எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இந்த கோரிக்கையை விடுத்தார்.

மேலும் எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே பொது மக்களின் சுமையைத் தணித்ததாகவும், ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் சலுகைகளை வழங்கியதாகவும் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டினார்.

ஆகவே பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும் என்பதோடு தகுந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *