வாரத்திற்கு 100 மணி நேர வேலை… தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கின்றனர் Goldman Sachs ஊழியர்கள்

Spread the love


Images

  • stress ph

Goldman Sachs நிறுவனத்தின் இளநிலை வங்கியாளர்கள், தங்கள் வேலைப் பளு குறித்து புகார் அளித்ததை அடுத்து, அவர்களுக்குச் சனிக்கிழமை விடுப்பு கொடுக்க முயற்சி செய்யப்போவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சோலமன் (David Solomon) கூறியுள்ளார்.

மற்ற பிரிவுகளில் உள்ள வங்கியாளர்களை வேலை அதிகம் உள்ள பிரிவுகளுக்கு மாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சென்ற வாரம், இளநிலை வங்கியாளர்கள் வாரத்திற்கு சுமார் 100 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பது குறித்து தலைமை நிர்வாகத்திடம் கூறியிருந்தனர்.

தினமும், இரவு 5 மணி நேரம் மட்டுமே தூங்க முடிவதாகவும், சாத்தியமற்ற காலக்கெடுக்கள் கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நிலைமை மாறவில்லை என்றால், அவர்களில் பாதிப் பேர் சில மாதங்களில் வேலையிலிருந்து விலகப் போவதாகப் பகிர்ந்திருந்தனர்.

அதை அடுத்து, ஊழியர்கள் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை வேலை செய்யக்கூடாது என்ற விதியின் அமலாக்கத்தை வலுப்படுத்தப்போவதாகத் திரு. சோலமன் சொன்னார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: