வானவில் நிறங்களில் ஜொலிக்கும் வெற்றுத்தளம் – வானவில் விளக்குகளை நிறுவும் கலை முயற்சி

Spread the love

கழக புளோக்குகளின் வெற்றுத்தளம் நடு இரவில் வானவில் நிறங்களில் ஜொலிப்பதை நீங்கள் கண்டதுண்டா?

Very Small Exhibition எனும் கண்காட்சி மூலமாக,
43 வயது திரு. வெய் (Wei) வானவில் நிறங்களில் உள்ள விளக்குகளைக் கொண்டு அடுக்குமாடிக் கட்டடத்தின் கீழ்த்தளத்தை வண்ணமயமாக்கினார்.

சிறிது நேரத்திற்கு மட்டும்தான், அந்த வானவில் விளக்கு வரிசை இருந்தது.

அதன் படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகின்றன.

அவரின் கலை முயற்சி பற்றி ‘செய்தி’ மேலும் கேட்டறிந்தது.

திரு. வெய், வயது 43

Very Small Exhibition என்றால் என்ன? அது எவ்வாறு தொடங்கப்பட்டது?

Very Small Exhibition என்பது நானும் என் 2 நண்பர்களும் 2013இல் தொடங்கிய ஒரு கூட்டுக் கலை முயற்சியாகும். ஆனால் நான் மட்டும் இப்போது அதை இயக்குகிறேன்.

சமீபத்தில் நடந்த வானவில் விளக்குக் கண்காட்சி “Very Momentary Exhibition” என்று அழைக்கப்படுகிறது. அது மிகவும் எளிதாக, நானே சொந்தமாக வடிவமைத்தது.

வானவில் கண்காட்சியை நடத்த என்ன காரணம்?

இந்த ஆண்டு, நான் ஒரு முழுநேரக் கலைஞராக மாற முடிவு செய்துள்ளேன். ஆண்டு முழுவதும் என்னால் முடிந்தவரை கலைப்படைப்புகளை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். “Very Momentary Exhibition” 2017ஆம் ஆண்டில் கருத்தாக்கம் செய்யப்பட்டது.

மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தரும் வகையில், ஏற்கனவே இருக்கும் விளக்குச் சாதனங்களைக் கொண்டு வானவில் வண்ணங்களில் காட்சியை அமைக்க அந்த யோசனை உதவியது.

ஏன் வானவில் கருப்பொருள்?

வானவில், நாம் சிறிதும் எதிர்பார்க்காதபோது தோன்றும்.
அதைக் காணும்போது, அனைவரிடத்திலும் தூய மகிழ்ச்சி உண்டாகிறது.

அதனால், வானவில் விளக்குகள் சாதாரண இடங்களில் பொருத்தப்பட்டன.

வானவில் விளக்குக் காட்சி் ஏன் சிறிது நேரத்திற்கு மட்டும்?

வானத்தில் உள்ள வானவில் எவ்வாறு சிறிது நேரம் கழித்து மறைந்துவிடுமோ, அதே போல் விளக்குகளும் சிறிது நேரத்திற்கு மட்டுமே இயங்கும்.

எங்கு நடத்தப்பட்டது?

நான் வசிக்கும் Mountbatten வட்டாரத்தின் Jalan Batu-வில் வானவில் விளக்குக் கண்காட்சி நடத்தப்பட்டது.

வானவில் விளக்குக் காட்சிக்கான செலவுகள்

அது என் சொந்தச் செலவில் செய்யப்பட்டது. பொருள்களின் விலை சுமார் 50 வெள்ளி இருக்கலாம். பெரும்பாலான பொருள்களை நான் மறுபயனீடு செய்கிறேன். அவற்றைத் தயாரிக்க சில வாரங்கள் எடுத்துக்கொண்டேன்.

அடுத்த கண்காட்சியை எப்போது எதிர்பார்க்கலாம்?

தற்போது, சிங்கப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் ஒரு விளக்குக் காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளேன். இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேல்விவரம் இருந்தால், Very Small Exhibition Facebook, Instagram பக்கங்களில் அறிவிக்கப்படும்.   

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *