வாத்தியாராக தோனி, கோலி படையில் மீண்டும் அஷ்வின்… டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு எப்படி?! | India’s T20 worldcup squad announcement has some big surprises and minor disappointments

Spread the love

ஓப்பனிங்கைத் தாண்டி அடுத்தடுத்த வரிசையில் கோலி, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், பன்ட், ஹர்திக் பாண்ட்யா என பேட்டிங் ஆர்டர் நீளும். பும்ரா, புவனேஷ்வர், ஷமி என வேகப்பந்து வீச்சும், ராகுல் சஹார், ஜடேஜா, அஷ்வின், அக்சர் பட்டேல் என ஸ்பின்னும் வலுவாகவே இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்படும்பட்சத்தில் ஷர்துல் தாகூர், மிடில் ஆர்டர் பேக் அப்புக்கு ஷ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்வர் குமார், ஷமி காயமடையும்பட்சத்தில் தீபக் சஹார் என ரிசர்வ் ப்ளேயர்கள் பட்டியலும் கச்சிதமாகவே இருக்கிறது.

கோலியின் பிடித்தமான வீரர்களாக கருதப்பட்ட சஹாலும், சிராஜும் அணியில் இல்லாததும் குட்டி சர்ப்ரைஸ். ஒட்டுமொத்தமாக எல்லா பாக்ஸ்களையும் டிக் அடிக்கும் வகையில் பெரிய சர்ப்ரைஸ்களையும் சிறிய ஏமாற்றங்களையும் கொண்ட அணியாக இந்த இந்திய அணி இருக்கிறது. 2019 உலகக்கோப்பையை கோலி வென்று தோனி கையில் கொடுத்து தோனியை கௌரவமாக வழியனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: