‘‘வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்’’- வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர்  மோடி வாழ்த்து | Tokyo Paralympics: Yogesh Kathuniya Wins Silver

Spread the love

டோக்கியோவில் நடைபெற்றும் வரும் பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா.

பாராலிம்பிக்கில் ஆடவா் வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கதுனியாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

“யோகேஷ் கதுனியா சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. அவரது இந்த சிறப்பான வெற்றி வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். #Paralympics”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: