வருணுக்கு வாய்ப்பு கிடைக்குமா * உலக ‘டுவென்டி–20’ அணியில்…

Spread the love

புதுடில்லி: உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தின் வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஐ.சி.சி., உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் வரும் அக். 17–நவ. 14ல் எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. கொரோனா காரணமாக வீரர்கள் எண்ணிக்கை 23க்குப் பதில் 30 வரை (பயிற்சியாளர்கள் உட்பட) தேர்வு செய்ய ஐ.சி.சி., அனுமதித்தது.

இந்திய அணி குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும். இதில் 18 அல்லது 20 வீரர்கள் இடம் பெறலாம். ஜடேஜா, சகால் என இருவர் அணியில் இடம் பெற்றாலும், மூன்றாவது சுழல் வீரர் இடத்துக்கு வருண் சக்ரவர்த்தி, ராகுல் சகார் இடையே போட்டி காணப்படுகிறது. ரிஷாப் பன்ட், லோகேஷ் ராகுல் என இரு விக்கெட் கீப்பர்கள் இடம் உறுதி என்றாலும், அடுத்து இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் இடையே போட்டி உள்ளது. ஹர்திக் பாண்ட்யா 4 ஓவர்கள் பவுலிங் செய்ய முடியாத நிலை உள்ளது. இவரது இடத்துக்கு ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்படலாம். 

எதிர்பார்க்கும் அணி:

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ராகுல், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜடேஜா, சகால், தீபக் சகார், முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.

இவர்களுடன் தவான்/பிரித்வி ஷா, இஷான் கிஷான்/சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி/ராகுல் சகார், சக்காரியா/நடராஜன், அக்சர் படேல்/குர்னால் பாண்ட்யாவுடன் உடற்தகுதியை பொறுத்து வாஷிங்டன் சுந்தர் தேர்வாகலாம்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: