வருகிறார் சுனில் செத்ரி: ஏ.எப்.சி., கால்பந்து போட்டிக்கு | ஏப்ரல் 08, 2021

Spread the love

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சுனில் செத்ரி, ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து போட்டிக்கான பெங்களூரு அணியை வழிநடத்துகிறார். ஆசிய கிளப் அணிகள் பங்கேற்கும் 18வது ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் தெற்காசிய அணிகள் பங்கேற்கும் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான தகுதிப் போட்டியில் பெங்களூரு அணி, நேபாள ஆர்மி கிளப் அணியை வரும் ஏப். 14ல் கோவாவில் சந்திக்கிறது. இப்போட்டிக்கான 29 பேர் கொண்ட பெங்களூரு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *