Spread the love
Images
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
புகைப்படத்தில் உள்ளவருக்கு நரைமுடி, சுருக்கங்கள், கண்களுக்குக் கீழ் கருவளையங்கள்…வயதானவரைப் போலத் தோன்றும் இந்தப் படத்தில் உள்ளவர் இளையர்தான்.
இது எப்படி சாத்தியம்?
புதிய செயலி ஒன்றின் ‘filter’ எனப்படும் உருமாற்றும் அம்சம் அறிவார்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒருவருடைய முகத்தை வயதானவரைப் போல மாற்றுகிறது.
சமூக ஊடகங்களில் அதிகப் புகழ்பெற்று வருகிறது FaceApp செயலியின் மூலம் உருமாற்றப்பட்ட படங்கள்.
குழந்தையைப் போல உருமாற்றுவது, பாலினத்தை மாற்றுவது போன்ற அம்சங்களைக்கொண்ட செயலிகளும் முன்னர் சமூக ஊடகத்தில் பிரபலமாக இருந்தன.