வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிரந்தரமானது; அதை நீக்க முடியாது! – ராமதாஸ் | Vanniyar Reservation Act is permanent it cannot be removed saysRamadas

Spread the love


அ.தி.மு.க அரசின் கீழ் நடந்த கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடரில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், 10.5 சதவிகதத்தை வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்குத் தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அவரைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தற்காலிகமானதே என, இன்றைய தேர்தல் பிரசாரத்தில் பேசினார். துணை முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் பேசுபொருளாகியது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *