வட மாவட்டங்களை குழப்புகிறதா வன்னியர் இடஒதுக்கீடு? ராமதாஸை கொதிக்க வைத்த ஓ.பன்னீர்செல்வம்

Spread the love


  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக

அதிமுக பாமக

பட மூலாதாரம், AIADMK FB

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு நாள்களே இருப்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனிநபர் தாக்குதல்கள், பண விநியோகம் என அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தாலும் கொங்கு மண்டலத்திலும் வட மாவட்டங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். `தென் மண்டலத்தில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.கவால் பாதிப்பு ஏற்படலாம்’ என்பதால், அதற்கேற்ப பிரசார வியூகங்களை அ.தி.மு.க வடிவமைத்து வருகிறது.

கொதிப்பில் பா.ம.க

அதன் ஒருபகுதியாக வன்னியர் உள்ஒதுக்கீடு தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்துகள், பா.ம.க தரப்பின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. முன்னதாக, ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஓ.பி.எஸ், ` வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது தற்காலிமானதுதான். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகே வன்னியர் இடஒதுக்கீடு இறுதி செய்யப்படும்’ எனக் கூறியிருந்தார். இதேபோன்ற கருத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டு, பின்னர் தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

முதல்வர் தரப்பும் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பும், இடஒதுக்கீடு நிரந்தரமானது எனக் கூறிவரும் நிலையில், தென்மண்டலத்தில் ஒலிக்கும் குரல்களால் கொங்கு அமைச்சர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ` தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடப்பங்கீடு வழங்குவதற்கான சட்டம் தற்காலிகமானதுதான் என்று சமூகநீதி குறித்த புரிதல் இல்லாத சிலர் கூறி வருகின்றனர். வன்னியர்களுக்கான இடப்பங்கீடு என்பது சாதிப் பிரச்னை அல்ல. அது சமூகநீதி சார்ந்த, தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரச்னை ஆகும். சட்டப்பேரவையில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டால் அது நிரந்தரமான சட்டம்தான். சட்டத்தில் தற்காலிக சட்டம் என்று ஒன்று கிடையாது’ என்கிறார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: