வட கொரியத் தலைநகர் பியோங்யாங்கில் அத்தியாவசிய பொருள்களுக்குப் பற்றாக்குறை

Spread the love


வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் கொரோனா கிருமிப்பரவல் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதால், நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் அண்டை நாடான ரஷ்யா, அதனுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது.

கட்டுப்பாடுகள் காரணமாக உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு அங்கு பற்றாக்குறை நிலவுவதாகத் தூதரகம் தெரிவித்தது.

உணவுப் பற்றாக்குறையால் வடகொரியா, இதற்கு முன்பிலிருந்தே அவதியுற்று வருகிறது.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முடக்கநிலையால், அனைத்துலக விமானச் சேவைகளும் எல்லை தாண்டிய ரயில் சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *