வங்கதேசத்தில் பழமையான காளி கோயிலில் பிரதமர் வழிபாடு| Dinamalar

Spread the love

டாகா: வங்கதேசத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஜெஸ்ஹோரேஸ்வரி காளி கோயிலில் வழிபாடு நடத்தினார்.

latest tamil news

வங்கதேசம் தனி நாடாக உருவாகி, 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு, சுதந்திர தின பொன் விழாவை சிறப்பாக கொண்டாட, அந்த நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.இதையொட்டி, தலைநகர் தாகாவில் நடக்கும் விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார். இதை, ஏற்று பிரதமர் மோடி டாகா சென்றுள்ளார்.

latest tamil news

இரண்டாவது நாளான இன்று வங்கதேசத்தின் சக்திஹிரா மாவட்டத்தில் உளள ஈஸ்வரிபூர் நகரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜெஸ்ஹோரேஸ்வரி காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

latest tamil news

கோயிலுக்கு வந்த மோடிக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளியால் உருவாக்கப்பட்ட கிரீடத்தை காளி தேவிக்கு, மோடி சூட்டினார். பின்னர் வழிபாடு நடத்தினார். தியானமும் செய்தார். அப்போது, அர்ச்சகர் வேத மந்திரங்கள் ஓதினார்.

latest tamil news

பின்னர் நிருபர்களை சந்தித்த மோடி கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்க வேண்டும் என காளியிடம் பிரார்த்தனை செய்தேன். ஏராளமான பக்தர்கள், எல்லை தாண்டி வந்து வங்கதேசத்தில் உள்ள காளி கோயிலில் தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோயிலுக்கு வரும் அனைத்து சமூகத்தினரும் தங்கும் வகையில் சமுதாய கூடம் தேவை. அவ்வாறு இருந்தால், அது பயனுள்ளதாக இருக்கும்.
சமுதாய கூடத்தை இந்தியா கட்டமைத்து கொடுக்கும். மதரீதியான நிகழ்ச்சிகள், கல்வி, சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பயன்படும் வகையில் அந்தக்கூடம் இருக்கும். புயல், மழைகாலங்களில் மக்கள் தங்கி கொள்ளலாம். இதற்கான பணிகளை இந்தியா விரைவில் துவங்கும். இங்கு வழிபாடு நடத்த வாய்ப்பளித்த வங்கதேச அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

பின்னர் கஷியானி உபஜிலா பகுதியில் .ள்ள ஒரகண்டி கோயிலிலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

latest tamil news

தொடர்ந்து அவர் கூறியதாவது: இந்த கோயிலுக்கு வரவேண்டும் என நீண்ட நாட்களாக எண்ணி இருந்தேன். இந்த வாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தேன். கடந்த 2015ம் ஆண்டு வங்கதேசம் வந்த போது, ஓரகண்டி கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்தேன். அது தற்போது தான் நிறைவேறி உள்ளது என தெரிவித்தார்.

latest tamil news

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *