லாக் டவுனுக்கு தயாராகுங்கள்- அதிகாரிகளுக்கு தாக்கரே அறிவுறுத்தல் || Maharashtra CM Uddhav Thackeray instructed them to prepare for restrictions similar to lock down

Spread the loveமகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாததுதான் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்து வருகிறார். மேலும், இது தொடர்ந்தால் லாக்டவுன் சூழ்நிலை உருவாகக்ககூடும் எனவும் தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,643 ஆக உயர்ந்துள்ளது. 20,854 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 27,45,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,53,307 குணமடைந்துள்ளனர். 54,283 பேர் உயிரிழந்துள்ளனர். 3,36,584 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கொரோனா தொற்று பணிக்குழு உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் லாக்டவுன் போன்ற கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தயாராக இருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் ‘‘மக்கள் வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அதனால்தான் லாக்டவுன் போன்ற கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகிறது’’ என்றார்.

நவாப் மாலிக்

ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான நவாப் மாலிக் ‘‘எங்களால் லாக்டவுனை சமாளிக்க முடியாது. நாங்கள் மற்ற வாய்ப்புகள் இருந்தால் பரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

பாதிப்பு அதிகரித்து வருவதால் அதிகாரிகளிடம் அவர் இதுபோன்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் லாக்டவன் தவிர்க்க முடியாதது என்பது அர்த்தம் அல்ல. பொதுமக்கள் நெறிமுறைகளை கடைபிடித்தால், லாக்டவுனை தவிர்க்க முடியும்’’ என்றார்.


https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *