ரோஹித் – ராகுல் கூட்டணி : லார்ட்ஸில், செம க்ளாஸில்… இந்தியாவின் ஓப்பனிங் பிரச்னை தீர்ந்ததா? | Rohit & Rahul made a record 100 run opening partnership with their master class strokes

Spread the love

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்
Alastair Grant

இத்தனை சிரமங்கள் கொடுத்த போதும் ரோஹித் – ராகுல் கூட்டணி அசரவே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் முதல் செஷனை முடிந்தளவுக்கு பொறுமையாக ஆட வேண்டும். அதை இந்த கூட்டணி மிகச்சிறப்பாக செய்திருந்தது.

‘Complementing each other’ என்பதே பார்ட்னர்ஷிப்களுக்கான அடிப்படையான விஷயம். இதுவும் ரோஹித் & ராகுல் கூட்டணியிடம் அற்புதமாக வெளிப்பட்டிருந்தது. பொறுப்பாக ஆடுகிறோம் என்ற பெயரில் இருவருமே பந்தை தொடாமலே இருந்தால் ஸ்கோர் போர்ட் அப்படியேத்தான் இருக்கும். இதனால் முதல் 10 ஓவர்களுக்கு பிறகு ரோஹித் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க தொடங்கினார்.

ராகுல்

ராகுல்
Alastair Grant

ஓவர் தி விக்கெட்டில் வந்த சாம் கரண் பந்தை இன்ஸ்விங் செய்ய வேண்டும் என விரும்பினார். ஆனால், கடைசி வரை அது கைகூடவில்லை. இடக்கை பௌலர்களுக்கே உரியே ஆங்கிள் அவுட் டெலிவரிக்களையும் இன்ஸ்விங்கிற்கு முயற்சித்து தோல்வியுற்று லெக் ஸ்டம்ப் லைனிலுமே தொடர்ந்து வீசினார். சர்ப்ரைஸ் எதுவும் இல்லாமல் இருந்த சாம் கரனிம் பௌலிங்தான் ரோஹித்தின் டார்கெட் அவரை விட்டு வெளுத்தெடுத்தார். ஒரே ஓவரில் நான்கு பவுண்டரிகளிலெல்லாம் வந்தது.

இதன்பிறகு, மார்க்வுட் அறிமுகப்படுத்தப்பட்டார். 150 கி.மீ க்கு மேல் வீசும் அவர் ரோஹித்துக்கு என்ன லென்த்தை வீசக்கூடாதோ அதையே வீசினார். அது ஷார்ட் லென்த். ராக்கெட் வேகத்தில் மார்க் வுட் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களை அழகாக லெக் சைடில் பவுண்டரியாக்கினார்.

ரோஹித் இப்படி ஒரு பக்கம் பொளந்து கட்ட, ராகுல் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். புஜாரானந்தா சுவாமிகளின் மனநிலையோடு 20 ஸ்ட்ரைக் ரேட்டிலேயே ஆடிக்கொண்டிருந்தார். அதுதான் இந்திய அணிக்கு தேவையாகவும் இருந்தது. ரோஹித் அட்டாக் செய்து ஸ்கோரை உயர்த்த இவர் தற்காப்பு ஆட்டத்தை ஆடி விக்கெட்டை விடாமல் பார்த்துக் கொண்டார். சரியாக சாம் கரண் ஓவரில் சிங்கிள் தட்டி ரோஹித்துக்கு ஸ்ட்ரைக்கையும் கொடுத்தார். இதற்கு பெயரே Complementing each other.

Lord's honours board

Lord’s honours board
Lord’s

திட்டமிடலோடு தீர்க்கமாக பயணித்த இந்த கூட்டணி இந்த கூட்டணி 100 ரன்களை கடந்தது. 11 ஆண்டுகளுக்கு பிறகு SENA நாடுகளில் இந்திய ஓப்பனர்கள் அமைத்த முதல் சென்சுரி பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது.

ரோஹித் 83 ரன்களை அடித்திருந்தார். வெளிநாடுகளில் அவர் அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுதான். சென்சுரி அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆண்டர்சனின் வியூகத்துக்கு இரையாகி விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ரோஹித் – ராகுல் கூட்டணி 126 ரன்களை சேர்த்திருந்தது. ரோஹித் அவுட் ஆன பிறகு ராகுல் கியரை மாற்றி வேகமாக ஆடத் தொடங்கினார். தொடர்ந்து கோலியுடனுமே சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். கோலி க்ரீஸுக்குள் வந்தவுடனேயே அவர் ஆண்டர்சனை எதிர்கொள்ள வேண்டாம் என்பதற்காக, சிங்கிள் எடுக்காமல் முழுமையாக ஆண்டர்சனை எதிர்கொண்டு complementing each other என்பதை மீண்டும் செய்திருந்தார். ஆண்டர்சனின் பந்துகளில் ராகுல் அடித்த டிரைவ்கள் அத்தனையும் பிசிறு தட்டாத க்ளாஸ் தாண்டவம். ஒரு அற்புதமான சதத்தோடு நேற்றைய நாளை முடித்திருக்கிறார் ராகுல். 127 ரன்களுக்கு நாட் அவுட்டாக இருக்கும் ராகுல் இரண்டாம் நாளில் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்ப்போம்.

ரோஹித் மற்றும் ராகுல் இருவரின் ஆட்டத்தையும் மைக்கேல் வாஹன் புகழ்ந்து தள்ளியிருந்தார். இருவருமே தங்களின் டெஸ்ட் கரியரின் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதற்காக ஆடிய இந்த இன்னிங்ஸ் இந்திய அணியின் ஒரு தசாப்த ஓப்பனிங் பிரச்னைக்கு தீர்வாக அமைந்திருக்கிறது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: