ரொனால்டோ அசத்தல் அறிமுகம்: மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

Spread the love

மான்செஸ்டர்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோலடித்து கைகொடுக்க மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் பிரிமியர் லீக் தொடர் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட், நியூகேசில் யுனைடெட் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய மான்செஸ்டர் யுனைடெட் அணி 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த அணி சார்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 (45+2, 62வது நிமிடம்), புரூனோ பெர்ணான்டஸ் (80வது), லிங்கார்டு (90+2) கோலடித்தனர்.

 

ரொனால்டோ அசத்தல்: இப்போட்டியில் அபாரமாக ஆடிய போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியின் யுவன்டஸ் அணியில் இருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சமீபத்தில் ஒப்பந்தமானார். ஏற்கனவே இவர், 2003–2009ல் இந்த அணிக்காக (84 கோல், 194 போட்டி) பங்கேற்றிருந்தார். 12 ஆண்டுகளுக்கு பின், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பிய இவர், களமிறங்கிய முதல் போட்டியில் 2 கோலடித்து வெற்றிக்கு உதவினார். இவரது ‘பார்ம்’ தொடரும் பட்சத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி கோப்பை வெல்வது உறுதி. இந்த அணி, இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என, 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: