`ரூ.39 கோடி இழப்பீடு?’ – ஆட்சியர் அலுவலக சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு! – விழுப்புரத்தில் பரபரப்பு | Villupuram Court action against collector office in compensation issue

Spread the love


இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன்,

‘சிவானந்தத்திற்கு உரிய தொகையை வழங்க வேண்டும். அப்படி இல்லையெனில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கார்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களும், விழுப்புரம் வீட்டு வசதி வாரிய பிரிவின் நிர்வாக அதிகாரி மற்றும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அசையும் சொத்துக்களையும் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.” என கடந்த 24.03.2021 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் தேர்தல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் (06.04.2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதோடு சேர்த்து, வீட்டு வசதி வாரியம் தொகையை திருப்பி தருவதற்கான காலக்கெடுவும் அண்மையில் முடிவடைந்துள்ளது.

சிவானந்தம் ஆட்சியரகம் கொண்டுவந்த ஜப்தி செய்வதற்கான தாள்.

சிவானந்தம் ஆட்சியரகம் கொண்டுவந்த ஜப்தி செய்வதற்கான தாள்.

இந்நிலையில், நேற்று முந்தினம் (07.04.2021) காலை ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு ஆணையின் நகல் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார் சிவானந்தம். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அச்சமயம் அங்கு இல்லாத காரணத்தினால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகனிடம் நீதிமன்ற உத்தரவு ஆணையை அளித்தனர். ‘அந்த இடத்திற்கான முழுத் தொகையை கொடுத்து விடுகிறோம். இதற்கு சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும்’ என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோகன் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை எழுத்து மூலமாக அளிக்கும்படி கேட்டுக் கொண்ட நீதிமன்ற ஊழியர்கள், இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை 02.06.2021 அன்று நடைபெற உள்ளதால், உரிய தொகையை அந்த தேதிக்குள் தரும்படி அவகாசம் வழங்கி சென்றுள்ளனர். இச்சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *