ரூ.1 கோடி நன்கொடை தம்பதி தாராளம்| Dinamalar

Spread the love


வாஷிங்டன்:பீஹார் மற்றும் ஜார்க்கண்டில், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் அமைப்பிற்கு, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதியர், 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

வட அமெரிக்காவில் வசிக்கும் இந்திய டாக்டர்கள், பீஹார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க, ஒரு முன்னாள் மாணவர் அமைப்பை உருவாக்கி உள்ளனர். இவர்கள் சார்பில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், ஒரு இலவச மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இதன் ஆதரவாளர்கள்,மாநிலம் முழுவதும் இலவச மருத்துவசேவைகளை வழங்குகின்றனர். இந்த அமைப்பிற்கான நிதி சேகரிப்பு பணிகளை, பீஹார் – ஜார்க்கண்ட் கூட்டமைப்பு மேற்கொள்கிறது. அமெரிக்காவில் வசிக்கும், இம்மாநிலங்களைச் சேர்ந்தோர், இதற்கு நன்கொடை அளிக்கின்றனர்.

இதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி கல்பனா பாட்டியா ஆகியோர், 1 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக, கூட்டமைப்பின் சார்பில், நேற்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *