ரிஷாப் பன்ட் புதிய கேப்டன்: ஐ.பி.எல்., டில்லி அணிக்கு

Spread the love


புதுடில்லி: ஐ.பி.எல்., டில்லி அணியின் புதிய கேப்டனாக ரிஷாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., தொடருக்கான டில்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளார். இவரது தலைமையில் டில்லி அணி கடந்த சீசனில் பைனல் வரை சென்றது. சமீபத்தில் புனேயில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ‘டைவ்’ அடித்து ‘பீல்டிங்’ செய்த போது இவரது இடது தோள்பட்டை விலகியது. இதனால் இவர், இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டிகள், 14வது ஐ.பி.எல்., சீசனில் இருந்து விலகினார்.

இந்நிலையில் புதிய கேப்டனை நியமிக்க டில்லி அணி நிர்வாகம் முடிவு செய்தது. ராஜஸ்தான் அணியில் இருந்து புதிதாக இணைந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், தமிழக ‘சுழல்’ வீரர் அஷ்வின், ரிஷாப் பன்ட் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. முடிவில் ரிஷாப் பன்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப், முதன்முறையாக ஐ.பி.எல்., தொடரில் கேப்டனாக களமிறங்க உள்ளார்.

Advertisement





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *