ராம்குமார்–ஸ்ரீராம் பாலாஜி ஜோடி சாம்பியன்

Spread the love

காசிஸ்: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி கோப்பை வென்றது.

பிரான்சின் காசிஸ் நகரில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, மெக்சிகோவின் ஹன்ஸ் ஹாச் வெர்டுகோ, மிகுயல் ஏஞ்சல் ரெயஸ்–வரேலா ஜோடியை எதிர்கொண்டது.

 

முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ராம்குமார்–பாலாஜி ஜோடி, 2வது செட்டை 3–6 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ எழுச்சி கண்ட இந்திய ஜோடி 10–6 என வென்றது. முடிவில் ராம்குமார் ராமநாதன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி 6–4, 3–6, 10–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

 

இது, சாலஞ்சர் இரட்டையரில் ராம்குமார் கைப்பற்றிய 6வது பட்டம். கடைசியாக, கடந்த ஆண்டு பெங்களூருவில் நடந்த தொடரில் சகவீரர் புரவ் ராஜாவுடன் இணைந்து பட்டம் வென்றிருந்தார். ஸ்ரீராம் பாலாஜி, சாலஞ்சர் இரட்டையரில் தனது 7வது பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசியாக, 2019ல் சீனதைபேயில் நடந்த தொடரில் இஸ்ரேல் வீரர் எர்லிச் ஜோனாதனுடன் இணைந்து கோப்பை வென்றிருந்தார்.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: