ராணிப்பேட்டை: `வெற்றியைச் சமர்ப்பிப்போம்!’ – எம்.பி முகமது ஜான் கல்லறை முன் அதிமுக வேட்பாளர் சபதம்| mp mohammed john death ranipet admk candidate takes oath to win

Spread the love


`உயிர் பிரிவதற்கு முன்பு வரை எனக்காக வாக்குச் சேகரித்தார்’ என்று கூறி முகமது ஜான் உடல் முன் கதறி அழுதார் வேட்பாளர் சுகுமார். முகமது ஜானின் உடலை வேட்பாளர் சுகுமார் தோளில் சுமந்து சென்றார். சுகுமாரின் இந்தச் செயல், முகமது ஜானின் உறவினர், சமூகத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உடலைச் சுமந்து செல்லும் எஸ்.எம்.சுகுமார்

உடலைச் சுமந்து செல்லும் எஸ்.எம்.சுகுமார்

ராணிப்பேட்டை தொகுதியில் இஸ்லாமியர்களும் கணிசமான அளவு இருக்கிறார்கள். எம்.பி முகமது ஜான் அதே சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இருப்பதாலும் அவருக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு கிடைத்தது. அவரது மறைவு இஸ்லாமியர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. `ராணிப்பேட்டை தொகுதியை வென்றெடுத்து, எம்.பி முகமது ஜான் கல்லறையில் அந்த வெற்றியைச் சமர்ப்பிப்போம்’ என்று கல்லறை முன் வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் அ.தி.மு.க-வினர் சபதம் ஏற்றனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *