ரவிசாஸ்திரியை ஆதரிக்கும் கங்குலி… சர்ச்சை பேட்டிகளால் கொதிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்! | ganguly’s interview sparks controversy in india england cricket relations

Spread the love

புத்தக நிகழ்ச்சிக்கு சாஸ்திரியோ மற்றவர்களோ எந்த அனுமதியும் கேட்கவில்லை எனச் சொல்லியிருக்கும் கங்குலி, அதற்காக அவர்களை குறை சொல்லமுடியாது என்றும் சொல்லியிருக்கிறார். “எத்தனை நாளைக்கு உங்களால் ஒரே ஹோட்டல் அறைக்குள்ளேயே முடங்கியிருக்க முடியும்? ஒரு நாள் முழுக்க உங்கள் வீட்டில் நீங்கள் அடைந்து கிடக்க முடியுமா? ஹோட்டலில் இருந்து மைதானம், மைதானத்திலிருந்து நேராக ஹோட்டல் எனப் பழகியவர்கள், சற்று வெளியே சென்று வருவதை நாம் தடுக்க முடியாதே” என சாஸ்திரிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார் கங்குலி.

விராட் கோலி - ஜோ ரூட்

விராட் கோலி – ஜோ ரூட்
Rui Vieira

செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்கூட்டியே செல்வதற்கு ஏதுவாகவே இந்திய வீரர்கள் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்துள்ளார்கள் என்கிற விமர்சனம் இங்கிலாந்தில் பரவலாக எழுந்துள்ளது. பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் இதே கருத்தை பேசிவருகிறார்கள். ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

“இந்திய வீரர்களும் பயிற்சியாளர்களும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பயோ பபுளில் இருக்கிறார்கள். இது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. இவை மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அவர்களும் மனிதர்கள் தானே. இங்கிலாந்திலிருந்து நேரடியாக துபாய்க்கு வரும் வீரர்கள், உடனடியாக மற்றொரு பயோ பபுளுக்குள் செல்கிறார்கள். மற்றுமொறு தனிமைப்படுத்தல், மற்றுமொரு பபுள்…இதற்கடுத்து டி20 உலககோப்பைக்காக தனியாக பயோ பபுளில் இருக்க வேண்டும். நாம் நினைப்பது போல் இதெல்லாம் அவ்வளவு எளிதல்ல” என முதல்முறையாக இங்கிலாந்து தொடர் சர்ச்சைகள் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார் கங்குலி.

பிசிசிஐ தலைவரின் இந்தப் பேச்சு கிரிக்கெட் அரங்கில் மீண்டும் பெருத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஜாஸ் பட்லர், ஜானி பேர்ஸ்ட்டோ, டேவிட் மலான் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார்கள். ஆர்ச்சர் காயம் காரணமாக விளையாடவில்லை. பென் ஸ்டோக்ஸ் ஏற்கெனவே கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்துவிட்டதால் அவரும் இந்த ஐபிஎல் தொடரில் இல்லை.

ஆனால், கொல்கத்தா அணியின் கேப்டனான, இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டன் இயான் மோர்கன் துபாயில் தன் அணியினருடன் இணைந்துவிட்டார். சாம் கரண், மொயின் அலி ஆகியோர் சென்னை அணியில் விளையாட இருக்கின்றனர். அதேப்போல் ஆதில் ரஷித், கிறிஸ் ஜோர்டன் போன்ற வீரர்களும் ஐபிஎல் பங்கேற்பை உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால், ஐபிஎல் தொடங்க இன்னும் 6 நாட்கள் இருப்பதால் கடைசி நேரத்தில் இங்கிலாந்து வீரர்கள் திடீரென விலகல் முடிவை எடுக்கலாம், அவர்களை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் கட்டாயப்படுத்தலாம் என்கிற பரபரப்பும் ஐபிஎல் அணிகளுக்குள் எழுந்திருக்கிறது.

விராட் கோலி

விராட் கோலி
Kirsty Wigglesworth

இதற்கிடையே நேற்று காலை அளித்த பேட்டி சர்ச்சைகளை எழுப்பியதால் மாலையே இன்னொரு பேட்டி அளித்திருக்கிறார் கங்குலி. அதில் ”தொடரின் தொடர்ச்சியாகவே ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கும். இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வது எங்களுக்குப் பெருமை. அதைவிட்டுத்தரமாட்டோம்” என காலையில் பேசியதை மறுத்து மாலையில் பேட்டி தந்திருக்கிறார் கங்குலி!

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: