ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமையை பறிக்க அரசாங்கம் முயற்சி – அஷோக அபேசிங்க

Spread the love


Published by T. Saranya on 2021-04-09 14:57:21

(எம்.மனோசித்ரா)

ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமையைப் பறித்து அவரின் குரலை முடக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதன் காரணமாகவே அவருக்காக 3 மாதங்கள் விடுமுறை கோரிய போதிலும் , அந்த கோரிக்கையை ஏற்காமல் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டமைக்கும் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றமைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. பாராளுமன்றத்திற்குள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம். வாரத்திற்கு இரு தடவைகள் பாராளுமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது. மக்களை தெளிவுபடுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

இந்நிலையிலேயே ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாப்பதற்கும் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தோம். பாராளுமன்ற உறுப்பினரொருவர் எவ்வித அறிவிப்பும் இன்றி 3 மாதங்கள் பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்காவிட்டால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்தாகும். எனவே தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 3 மாதம் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் சபாநாயகர் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில் ரஞ்சன் ராமநாயக்க விடுமுறையை அறிவிக்காமல் 3 மாதங்கள் பாராளுமன்றத்திற்கு வருகை தராமையால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு எந்த பிரச்சினையும் கிடையாது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு அதிக காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டு 6 மாத காலம் தண்டனையை அனுபவித்தால் அவர்களின் குடியுரிமை இரத்தாகும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கவின் குடியுரிமையை நீக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றமை இதன் மூலம் தெளிவாகிறது.

தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகியுள்ளது. எனவே ஜூலை மாதமாகும் போது அவரது குடியுரிமையும் தானாவே இரத்தாகும். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டாலும் அவரது குடியுரிமை இரத்தாகியதாகவே காணப்படும். அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. எனினும் இறுதி பாராளுமன்ற தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் 1 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். எவ்வாறிருப்பினும் அவருக்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்றார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: