யூரோ இறுதிச் சுற்றைக் காண இத்தாலியர்கள் பயணம் செய்யக்கூடாது : பிரிட்டிஷ் அமைச்சர்

Spread the loveImages

  • britain transport min

    Reuters/Simon Dawson

இத்தாலியின் காற்பந்து ரசிகர்கள், யூரோ 2020 இறுதிச் சுற்றைக் காண இங்கிலாந்துக்கு வர முயற்சிசெய்ய வேண்டாம் என்று பிரிட்டனின் போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷேப்ஸ் (Grant Shapps) கூறியிருக்கிறார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை, லண்டனின் வெம்பிளி (Wembley) விளையாட்டரங்கில் இறுதிச்சுற்று நடக்கவுள்ளது.

அதில், இங்கிலாந்தும் இத்தாலியும் பொருதவுள்ளன.

சுமார் 60,000 பேர் அந்த விளையாட்டைக் காணச் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இத்தாலியிலிருந்து வருவோர், பிரிட்டனில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனும் நோய்ப்பரவல் கட்டுப்பாடு தற்போது நடப்பில் உள்ளது.

காற்பந்தாட்டத்தைக் காண்பதற்காகவே வருவதாகச் சந்தேகம் எழுந்தால், அவர்கள் இங்கிலாந்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் திரு. ஷேப்ஸ் குறிப்பிட்டார்.

அந்த அடிப்படையில், தனியார், நேரடி விமானச் சேவைகள் பல, ரத்துசெய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: