யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: இந்தியா ஏமாற்றம்

Spread the love

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் தகுதிச்சுற்றில் சுமித் நாகல், ராம்குமார், அன்கிதா ரெய்னா தோல்வியடைந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொவர் வரும் ஆக. 30–செப். 12 வரை நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதன் முதல் போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 6–4, 6–7, 4–6 என்ற கணக்கில் ரஷ்யாவின் டான்ஸ்காயிடம் போராடி வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல், அர்ஜென்டினாவின் ஜுவான் பாப்லோவிடம் 5–7, 6–4, 3–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 

பெண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, அமெரிக்காவின் ஜெமி லோயப்பிடம் 3–6, 6–2, 4–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: