யு.எஸ்., ஓபன்: குன்னேஸ்வரன் வெற்றி | ஆகஸ்ட் 26, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் ஆக. 30 முதல் செப். 12 வரை யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கவுள்ளது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், கனடாவின் பிரைடன் ஷ்னுார் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய குன்னேஸ்வரன், ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த 2வது செட்டை 7–6 என தன்வசப்படுத்தினார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: