யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழப்பு

Spread the love

Published by T. Saranya on 2021-07-09 14:13:47

( எம்.நியூட்டன்)

யாழ். குடாநாட்டில் கொரோனா உயிரிழப்புகள் அண்மை நாட்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.

யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜூலை  மாதம் முதலாம் திகதி 4 மரணங்கள் ,ஜூலை – 02 – 2 மரணங்கள்,

ஜூலை – 04 – ஒரு மரணம்,ஜூலை – 05 – ஒரு மரணம், ஜூலை – 06 – 3 மரணங்கள்,ஜூலை – 07 – ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஜூலை-07 வரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேர்,கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்,நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்,உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேர்,சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்,பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்,சங்கானை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்,தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் – 05 பேர்,கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்,சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்,வேலணை பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்,காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் – 02 பேர்,ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் – ஒருவர்.பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: