யார் இந்த ஹசீப் ஹமீத்… இங்கிலாந்தின் மாடர்ன் ஜெஃப்ரி பாய்காட் இவர்தானா?! | who is Haseeb Hameed and why he celebrated as modern boycott

Spread the love


தொடக்கத்தில் இருந்தே, அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவுட் ஸ்விங், இன்ஸ்விங்குகளை பகுத்தறிந்து மிக கவனமாக, தனது இன்னிங்ஸை கட்டமைத்தார் ஹமீத். பந்தை அவர் டிஃபெண்ட் செய்த விதமும், தாமதமாக அதனைச் சந்தித்து ஆடியதும், அவரது ஃபுட் வொர்க்கும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஸ்லிப்பில் ரோஹித் தந்த கேட்ச் டிராப் வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது அரை சதத்தை கடந்தார் ஹமீத்.

1731 நாட்களுக்கு முன், தனது சர்வதேச கரியரில் ஒரு அரை சதத்தை பதிவேற்றி இருக்கிறார் ஹமீத். இந்தியாவுக்கு எதிரான அவரது 9 இன்னிங்ஸ்களில், இது மூன்றாவது அரை சதம் என்பதும், அவர் ஆடிய அத்தனை போட்டியும், இந்தியாவுக்கு எதிரானது மட்டுமே என்பதும் கூடுதல் சிறப்பு. இதையும் தாண்டி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு, அதில் ஒரு அரைசதம், அதுவும், தனது மண்ணில் அடித்த முதல் அரைசதம் என எல்லாமே, ஹமீத்துக்கு, இந்தச் சந்தர்ப்பத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறது.

ஹெட்டிங்லேயில், பர்ன்ஸ் – ஹமீத்தின் கூட்டணி ஆட்டம், இங்கிலாந்தின் சிறந்த ஓப்பனர்களுக்கான தட்டுப்பாட்டையும் சரி செய்து, ‘ஓப்பனர்களுக்கான தேடல் இங்கே முடிவடைந்தது’ என்பதைச் சொல்லாமல் சொல்ல வைத்துள்ளது.

ஃபவாத் ஆலம், பத்தாண்டுகளுக்குப் பிறகு, சதங்களோடு, தனது கிரிக்கெட் கரியரின் இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆடி வருவது போல், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், ஒரு அரைசதத்தின் வாயிலாக, தனது கரியரை ரீ ஸ்டார்ட் செய்துள்ளார் ஹமீத்.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, ஃபார்மை இழந்த ஒரு வீரர், அதை மீட்டெடுப்பது என்பதே மிகக் கடினம். முதலில் ஒதுக்கப்பட்டு, பின் மறுக்கப்பட்டு இறுதியாக மறக்கப்பட்டு விடுவார்கள். அப்படியிருக்க, ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின் ஒரு கம்பேக் என்பது, மகா கனவுதான். ஆனால், அதை, தனது விடா முயற்சியால், ஹமீத் நிகழ்த்திக் காட்டி உள்ளார்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: