மேலும் 20 மில்லியன் Pfizer தடுப்பூசிகளைப் பெறவுள்ள ஆஸ்திரேலியா

Spread the love



Pfizer நிறுவனத்திடமிருந்து மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறவுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார்.

தற்போது அங்கு 50 வயதுக்குக் கீழ்உள்ளவர்கள் தடுப்பூசி போடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

AstraZeneca தடுப்பூசி போடுவதால் ரத்தம் உறைந்து போகும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு Pfizer தடுப்பூசிகள் போடப்படும்.

சென்ற ஆண்டு, அந்த நிறுவனத்திடமிருந்து ஆஸ்திரேலியா 20 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கியது.

அதிகத் தேவை இருப்பதால் இருமடங்கு தடுப்பூசி வாங்கவிருப்பதாகப் பிரதமர் மாரிசன் சொன்னார்.

தடுப்பூசிகளின் கடைசித் தொகுப்பு இவ்வாண்டு இறுதிக் காலாண்டில் ஆஸ்திரேலியா சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *