மேற்கு வங்கம்: பணிப்பெண் டு பி.ஜே.பி வேட்பாளர்… மோடி பாராட்டிய கலிதா மஜி யார்? | Kalita Majhi – A housemaid contesting in bjp ticket at west bengal

Spread the love


மேற்கு வங்கத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் ஒருவர் அங்கு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடுகிறார்கள். இவரை பற்றி பிரதமர் மோடி பெருமையுடன் ட்வீட் செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பூர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ஆஸ்கிராம் தொகுதியில், கலிதா மஜி என்ற பெண்ணை பா.ஜ.க கட்சி வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளது.

கலிதா நான்கு வீடுகளில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வருகிறார். இதன் மூலம் மாதம் 2,500 ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டுகிறார். இவரின் கணவர் குழாய் பழுது நீக்குபவர். இவர்களுக்கு 8-ம் வகுப்புப் படிக்கும் ஒரு மகன் உள்ளார். பணிபெண்ணாக வேலைபார்த்து வரும் கலிதாவுக்கு அரசியலில் ஆர்வம் அதிகம். இதனால் கடந்த ஐந்து வருடங்களாகத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் கடந்த 2018-ம் வருடம் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *