மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து – சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு 1 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்க அரசாங்கத் தரப்புக் கோரிக்கை

Spread the love


தீவு விரைவுச் சாலையில் (PIE)கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும் போது மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு 1 மில்லியன் வெள்ளி அபாராதம் விதிக்குமாறு அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.

2017 இல் கட்டுமானத்தின் போது மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஓர் ஊழியர் மாண்டார். மேலும் , 10 பேர் காயமடைந்தனர்.

மேம்பாலம் இடிந்து விழுவதற்கு முன்பே, விரிசல்கள் தென்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட தரப்புகள் பணிகளை நிறுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 9) இரு தரப்பு வாதங்களைக் கேட்டபிறகு, தண்டனை அறிவிக்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2 விரைவுச்சாலைகளை இணைக்கும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமாறு நிலப் போக்குவரவு ஆணையம் Or Kim Peow Contractors (OKP) நிறுவனத்துக்குக் குத்தகை வழங்கியது.

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அந்நிறுவனம் மீது ஜனவரியில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம் விதிக்கக் கோரினர்.

ஆனால், 290,000 வெள்ளிக்கு மிகாமல் அபராதம் விதிக்குமாறு எதிர்த்தரப்பு வாதிட்டது.

மேம்பாலத்தை கட்டி முடிக்க இன்னொரு நிறுவனத்தை நியமித்திருப்பதாக 2018 டிசம்பரில் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

2022 முதல் பாதியில் அந்தப் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: