மேம்பட்ட உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நடுவம் மூலம் 4,500 வேலை வாய்ப்புகள்

Spread the love


சிங்கப்பூரில் மேம்பட்ட உற்பத்திக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய நடுவம் அடுத்த ஒன்றரை ஆண்டில் 4,500 வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் ஆயிரத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும்.

எஞ்சிய வேலைகள் இங்கு செயல்படவிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் கீழ் அமையும்.

ஜூரோங் புத்தாக்க வட்டாரம் அமைக்கப்பட்டதும் அங்கு 95,000-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல், நகரப்புறத் தீர்வுகள் உள்ளிட்ட துறைகளில் அந்தப் பணிகள் இருக்கும்.

இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் டான் சீ லெங் அது குறித்து இன்று அறிவித்தார்.

Sodick Singapore எனும் உற்பத்தி நிறுவனத்துக்குச் சென்றபோது அவர் பேசினார்.

அங்கு அவர் முப்பரிமாண அச்சிடுதலுக்கான TR87 எனும் புதிய வழிகாட்டிகளை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தினார்.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *