மெஸ்சி சம்பளம் ரூ. 422 கோடி * நெய்மர் அணிக்கு செல்ல சம்மதம்

Spread the love

பாரிஸ்: நெய்மரில் பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணியில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளார் மெஸ்சி. அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 34. தனது 13வது வயது முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடினார். 778 போட்டிகளில், 672 கோல் அடித்தார். கிளப் அரங்கில் ஒரு அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என சாதனை படைத்த மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக 35 கோப்பை வென்று தந்தார். 

இதனிடையே மோசமான நிதிநிலைமை காரணமாக, மெஸ்சியின் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், 21 ஆண்டுக்குப் பின் பார்சிலோனா அணி வெளியேற்றியது. இதனால் மெஸ்சி எங்கு செல்வார் என உறுதியில்லாமல் இருந்தது. மான்செஸ்டர் யுனைடெட், பாரிஸ் ஜெயன்ட் ஜெர்மைன் அணிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. 

தற்போது பிரேசிலின் நெய்மர், பிரான்சின் எம்பாப்வே, அர்ஜென்டினாவின் ஏஞ்சல் டி மரியா இடம் பெற்றுள்ள, பாரிஸ் அணியில் இணைய மெஸ்சி சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டு ஆண்டு ஒப்பந்தம் செய்யவுள்ள மெஸ்சிக்கு, ஆண்டு சம்பளமாக ரூ. 422 கோடி தரப்பட உள்ளது. இதற்காக மெஸ்சி, ஸ்பெயினில் இருந்து, பாரிஸ் சென்றுள்ளார் என, எல்.இகுபே என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது. 

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: