மெட்வடேவ் ‘மேஜிக்’ * ஜோகோவிச் கனவு தகர்ந்தது

Spread the love

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் பைனலில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஜோகோவிச். மெட்வடேவ் முதன் முறையாக சாம்பியன் ஆனார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச்,  உலகின் ‘நம்பர்–2’ இடத்திலுள்ள ரஷ்யாவின் மெட்வடேவை சந்தித்தார். 

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் கோப்பை வென்ற ஜோகோவிச், கோப்பை வெல்லும் பட்சத்தில் ஒரே ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் (‘காலண்டர் கிராண்ட்ஸ்லாம்’) வென்ற 3வது வீரர் ஆக காத்திருந்தார். தவிர 1969க்குப் பின் இச்சாதனை படைக்கும் முதல் வீரர் என்ற பெருமை பெற இருந்தார். 

ஆனால் இவருக்கு சரியான பதிலடி கொடுத்த மெட்வடேவ், போட்டியின் முதல் கேமில், ஜோகோவிச் ‘சர்வீசை’ கைப்பற்றி மிரட்டினார். முடிவில் முதல் செட்டை மெட்வடேவ், 6–4 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த இரு செட்களையும் 6–4, 6–4 என வசப்படுத்தினார். இரண்டு மணி நேரம் 17 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஜோகோவிச் 4–6, 4–6, 4–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைய, ‘காலண்டர் கிராண்ட்ஸ்லாம்’ கனவு தகர்ந்தது. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ந்து 27 போட்டிகளில் வென்ற ஜோகோவிச் வெற்றி முடிவுக்கு வந்தது. 

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன் முறையாக கோப்பை வென்று அசத்தினார் மெட்வடேவ். தவிர ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பைனலில் ஜோகோவிச்சிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து, கோப்பை கைப்பற்றினார். 

 

20

ஜோகோவிச் தோல்வியை அடுத்து, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் அதிக ஒற்றையர் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரருடன் இணைந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். மூவரும் தலா 20 முறை கோப்பை வென்றனர். அமெரிக்காவின் டான் பட்ஜ் (1938), ஆஸ்திரேலியாவின் ராட் லாவர் (1962, 1969) அதிகபட்சம் 21 கோப்பை வென்றுள்ளனர். 

 

38 

பைனலில் ஜோகோவிச் தொடர்ந்து சொதப்பினார். 38 முறை தவறு செய்ய இவர், பலமுறை கிடைத்த எளிய வாய்ப்புகளை வீணடித்தார். இந்த ஏமாற்றத்தில் மூன்று முறை தனது ‘ராக்கெட்டை’ தரையில் போட்டு உடைத்தார். 

 

நிம்மதி  

ஜோகோவிச் கூறுகையில்,‘‘கடந்த சில வாரங்களாக ‘காலண்டர் கிராண்ட்ஸ்லாம்’ குறித்த செய்திகளால் எதிர்பார்ப்பு பெரியளவு இருந்தது. இத்தொடர் முழுவதும் மனதளவில்  நெருக்கடியில் இருந்தேன். தற்போது போட்டி முடிந்ததால் ஒருவிதத்தில் நிம்மதி கிடைத்துள்ளது. அதேநேரம் தோல்வியால் சோகமாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன்,’’ என்றார்.

 

ரூ. 18.44 கோடி

முதன் முறையாக கோப்பை வென்ற மெட்வடேவுக்கு ரூ. 18.44 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: