முஸ்லிம்கள் தலையங்கி அணிவதன் தொடர்பில் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை அரசாங்கம் புரிந்துகொள்கிறது: பிரதமர் லீ

Spread the love


தலையங்கி அணிவதை முஸ்லிம் சிங்கப்பூரர்கள் எவ்வளவு முக்கியமாகக் கருதுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்வதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

முஸ்லிம் தாதியர் விரும்பினால் அவர்களை சீருடையுடன் தலையங்கி அணிய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.

தலையங்கி தொடர்பாக சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நசிருதீன் முகமது நசிருக்கு (Nazirudin Mohd Nasir) எழுதிய கடிதத்தில் திரு லீ அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நமது இன, சமய நல்லிணக்கம் என்பது அனைவரையும் பாரபட்சம் இல்லாமல் சமமாக நடத்தும் பண்பைக் கொண்டது” என்றார் பிரதமர் லீ.

அண்மை ஆண்டுகளாக இந்த விவகாரத்தின் தொடர்பில் நடந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டதற்காகவும் அரசாங்கத்தை ஆதரித்ததற்காகவும் டாக்டர் நசிருக்கும் மற்ற சமயத் தலைவர்களுக்கும் பிரதமர் லீ நன்றி தெரிவித்துக்கொண்டார்.

கடந்த வாரம் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், தாதியர் தலையங்கி அணிவதை அனுமதிக்காமல் இருக்கும் கொள்கையை அரசாங்கம் மாற்றக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது பிரதமர் லீயின் கருத்து வந்துள்ளது.  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: