“மீரா, 2012-ல தூக்குன ​வெயிட்டை 2014-ல உன்னால தூக்க முடியலையே!” : மீராபாய் சானு பயோபிக் – | tokyo olympics silver medalist Mirabai Chanu biopic episode five

Spread the love

கோச்: “ஆசியன் ஜூனியர்ஸ்ல எவ்ளோ வெயிட் தூக்குன?”

மீரா: “168 கிலோ சார்”

கோச்: “பட்டியாலா வந்த அப்றம் அதிகமா எவ்ளோ தூக்கிருக்க?”

மீரா: “165 சார்”

கோச்: “ஏன் வண்டி ரிவர்ஸ்ல போயிட்டிருக்கு?”

அமைதியாக நிற்கிறாள் மீரா. தலை குனிந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

கோச்: “மேல பாரு முதல்ல”

நிமிர்ந்து கோச்சின் கண்களைப் பார்க்கிறார்

கோச்: “ஒரு ஸ்போர்ட்ஸ் பெர்சன் மாதிரியா இருக்க. அசிங்கமா தலையை குனிஞ்சிகிட்டு. தோத்தாலும் நேரா பாக்கணும். 100 தடவை தோத்தாலும் நேரா பாக்கணும். என்ன?”

தலையாட்டுகிறாள்.

கோச்: “சரி என்ன பிரச்னைனு சொல்லு”

மீரா: “ஒண்ணும் இல்ல சார். இனி நல்லா பண்ணிடுவேன்”

கோச்: “எப்டி தினமும் அழுதுகிட்டேவா?”

மீராவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டே கீழே தலை குனிகிறது. கோச் முன்பு சொன்னது நினைவுக்கு வர மீண்டும் நிமிர்கிறாள்.

கோச்: “நியூஸ் வந்துச்சு. உன்ன ரொம்ப கஷ்டப்படுத்தறாங்க, ஹிந்தி புரியல அப்டினு போன் பண்ணி அழுதியாமே”

என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறாள் மீரா.

கோச்: “எனக்கு எப்படி மீத்தேய் மொழி தெரியும் தெரியுமா”

இல்லை என்று தலையாட்டுகிறாள் மீரா.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: