மீண்டு வந்தார் ஸ்ரேயாஸ்

Spread the love

புதுடில்லி: தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. கடந்த ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியை பைனலுக்கு கொண்டு சென்றார். கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது தோள்பட்டை பகுதியில் காயமடைய, ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார்.

14வது ஐ.பி.எல்., சீசன் உட்பட எந்த தொடரிலும் பங்கேற்க வில்லை. இவருக்குப் பதில் ரிஷாப் பன்ட் கேப்டனாக செயல்பட்டார். இதுவரை விளையாடிய 8 போட்டியில், 6 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் டில்லி அணி முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் எமிரேட்சில் துவங்குகிறது.

இதனிடையே தோள்பட்டை காயத்தில் இருந்து முழுமையாக மீண்டார் ஸ்ரேயாஸ். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.,) அனுமதி வழங்கியது. 

இதுகுறித்து ஒருவர் கூறுகையில்,‘‘ஸ்ரேயாஸ் மருத்துவம், உடற்தகுதி ரீதியில் போட்டியில் பங்கேற்க தயாராக உள்ளார். என்.சி.ஏ., சான்று வழங்கியது. உலக கோப்பை தொடருக்கு 2 மாதம் உள்ள நிலையில் சரியான நேரத்தில் ஸ்ரேயாஸ் தயாராகியுள்ளார்,’’ என்றார்.

இவரது வருகையால் டில்லி அணிக்கு ரிஷாப் கேப்டனாக தொடர்வாரா, ஸ்ரேயாஸ் மீண்டும் கேப்டன் ஆவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: