மீடியாகார்ப் 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளைப் பல்வேறு தளங்களில் ஒளிபரப்பும்

Spread the love


மீடியாகார்ப் நிறுவனம் 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளைப் பல்வேறு தளங்களில் ஒளிபரப்பும். Toggleஇல் அந்தப் போட்டிகளை 3 ஒளிவழிகளில் விளையாட்டு ரசிகர்கள் காணலாம்.

ஒளிவழி 5இல் தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளின் முக்கிய விவரங்களும் தகவல்களும் அன்றாடம் ஒளிபரப்பப்படும். CNAயும் விளையாட்டுகள் குறித்த அண்மைய தகவல்களை வெளியிடும். தொலைக்காட்சி, மின்னிலக்கத் தளம், YouTube, Telegram ஆகியவற்றில் அவை இடம்பெறும்.

பிலிப்பீன்ஸின் பல்வேறு இடங்களில் 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள் இம்மாதம் 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

11 நாடுகளைப் பிரதிநிதித்து சுமார் 9,000 விளையாட்டாளர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். 56 விளையாட்டுகளில் அவர்கள் போட்டியிடுவர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: