மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டங்களை ஒடுக்கும் நோக்கில் ராணுவம் துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 510 பேர் உயிரிழந்திருப்பதாக உள்ளூரை சேர்ந்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மியான்மரில் ராணுவம் அடக்குமுறைகளை கைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் தங்களது கந்தத்தை தெரிவித்து வருகின்றனர்.