மியான்மரில் உள்நாட்டுப் போர் ஏற்பட வாய்ப்பு: ஐ.நா தூதர் எச்சரிக்கை | Myanmar faces possibility of a civil war, warns UN envoy | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


Myanmar-faces-possibility-of-a-civil-war--warns-UN-envoy

மியான்மர் நாட்டின் .நா சிறப்பு தூதர் கிறிஸ்டின் புர்கெனர் “ மியான்மர், உள்நாட்டுப் போரின் சாத்தியத்தை முன்னெப்போதும் இல்லாத அளவில் எதிர்கொள்கிறது” என்று எச்சரித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 1-ல் இராணுவ சதித்திட்டம் மூலமாக, மியான்மரில் ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதன்பின்னர் தொடர்ந்து நாட்டின் பல நகரங்களில் வன்முறை வெடித்து வருகிறது. இந்த நெருக்கடி நிலையை மாற்றியமைத்து ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கானசாத்தியமான குறிப்பிடத்தக்க நடவடிக்கையைஎடுக்க .நா.பாதுகாப்புக் குழுவை  .நா சிறப்பு தூதர் கிறிஸ்டின் புர்கெனர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ சதித்திட்டத்தை மாற்றியமைக்கவும், ஆசியாவின் மையத்தில் ஒரு பல பரிமாண பேரழிவைத் தடுக்கவும், குறிப்பிடத்தக்க சாத்தியமான நடவடிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும், மியான்மர்தோல்வியுற்ற நிலைக்குச் செல்லும் விளிம்பில் உள்ளதுஎன்றும் புர்கெனர் கூறினார்.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி, ஆட்சி கவிழ்ப்பிலிருந்து இதுவரை சுமார் 2,729 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 536 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *