மியன்மார்மீது பிரிட்டனும் கனடாவும் விதித்துள்ள புதிய தடைகள்- ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்போர் வரவேற்பு

Spread the loveImages

  • myanmar (7)

    (படம்: AP)

மியன்மார்மீது பிரிட்டனும் கனடாவும் விதித்துள்ள புதிய தடைகளை ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்போர் வரவேற்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றும் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை.

மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் இன்றுடன் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றன.

முந்தைய ராணுவ அரசாங்கங்களின்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்தது. அதுபோலின்றி தற்போதைய பேரணி அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது.

எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்குக் காவல்துறை அதிகாரிகள் ரப்பர் தோட்டாக்களைப் பலமுறை பயன்படுத்தினர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை அங்கீகரிக்கவேண்டும் என்றும் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியை விடுவிக்கவேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *