மியன்மாருடனான அனைத்து வர்த்தகத்தையும் அமெரிக்கா ரத்து செய்தது

Spread the love


Images

  • Myan

மியன்மாருடனான அனைத்து வர்த்தகத்தையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

மியன்மாரில் மீண்டும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்துடன் மட்டுமே தனது வர்த்தகங்கள் தொடருமென அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் 2013ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக, முதலீட்டுக் கட்டமைப்பு உடன்பாட்டின் கீழ், அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களும் ரத்துசெய்யப்படுகின்றன.

அதன் மூலம் அமெரிக்காவின் பொது முன்னுரிமைப் பட்டியலில் இருந்து மியன்மார் நீக்கப்படும். வளர்ந்துவரும் நாடுகளுக்கு சிறப்பு வர்த்தகச் சலுகைகளை வழங்க அமெரிக்கா உருவாக்கிய திட்டம் அது.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே 1 புள்ளி 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகம் இடம்பெற்றது.

பாதுகாப்புப் படையினர் நடத்தும் வன்முறை, அனைத்துலகச் சமூகத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி கேத்ரின் டை (Katherine Tai) கூறியுள்ளார்.

மியன்மார் நிலைமை குறித்து அவசரநிலைப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டுமென பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து,
ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் நாளை கூடவிருக்கிறது.
 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *