மாணவர்மீது நிறவெறி விமர்சனம்: ஜூம் அழைப்பை துண்டிக்காததால் சிக்கிய அமெரிக்க ஆசிரியர்! | A School Teacher in California USA Who Forget to disconnect the Zoom Call with her student and the teacher made racist comment about the student s family which was recorded by student s parent | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

Spread the love


A-School-Teacher-in-California-USA-Who-Forget-to-disconnect-the-Zoom-Call-with-her-student-and-the-teacher-made-racist-comment-about-the-student-s-family-which-was-recorded-by-student-s-parent

அமெரிக்காவில் பாட நேரத்துக்குப் பிறகும் ஜூம் மீட்டிங் அழைப்பைத் துண்டிக்கத் தவறிய ஆசிரியை தனது மாணவரின் குடும்பத்தினர் குறித்து நிறவெறி ரீதியில் பேசிய சம்பவம் விசாரணைக்கு உள்படுத்தப்படுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் பாட நேரத்திற்குப் பிறகு மாணவர் உடனான ஜூம் மீட்டிங் அழைப்பை ஒரு பெண் ஆசிரியர் துண்டிக்க தவறியுள்ளார். அத்துடன், அந்த மாணவரின் குடும்பத்தைப் பற்றி நிறவெறி ரீதியாக விமர்சித்தும் உள்ளார். அதனை, சம்பந்தப்பட்ட மாணவரின் குடும்பத்தினர் பதிவு செய்து, அது தொடர்பாக புகார் செய்தனர்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட பெண் ஆசிரியர் கிம்பெர்லி நியூமென், ஜூம் அழைப்பில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக 12 வயது கறுப்பின மாணவரான கட்டுரா ஸ்ட்ரோக்ஸ் மற்றும் அவரது குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவரின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவர் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மேலும், அந்த ஆசிரியரின் நிறவெறி ரீதியிலான விமர்சனத் தாக்குதல் குறித்து சட்ட ரீதியாவும் போராடவுள்ளதாக மாணவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *