மஹாபலிபுரத்தில் நடந்து முடிந்த தேசிய பீச் மல்யுத்த தொடர்… இங்கும் ஹரியானாவின் ஆதிக்கம்! | First National Beach Wrestling tournament held in Mahabalipuram

Spread the love


மகாபலிபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கடற்கரை விடுதியில், கடந்த 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலும் இருந்து 23 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் மல்லுக்கட்டினர். மகளிர் பிரிவில் 50 கிலோ, 60 கிலோ, 70 கிலோ மற்றும் 70+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் மற்றும் ஆண்கள் பிரிவில் 70 கிலோ, 80 கிலோ, 90 கிலோ மற்றும் 90+ கிலோ என 4 எடைப்பிரிவுகள் என மொத்தம் 8 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. வழக்கமாக மல்யுத்தத்தில் தலா மூன்று நிமிடங்களுக்கு இரண்டு சுற்றுகள் நடைபெறும் நிலையில், பீச் மல்யுத்தத்தைப் பொறுத்த வரையில் மூன்று நிமிடங்களுக்கு ஒரேயொரு சுற்று மட்டுமே நடத்தப்படுகிறது.

பல நாடுகளில் பிரபலமான இந்தப் போட்டியை ​இந்தியாவிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் முதல் தேசிய பீச் மல்யுத்தப் போட்டி மஹாபலிபுரத்தில் நடத்தப்பட்டது. இதன் முதல் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு மாநில கூட்டமைப்பும் ஒரு பிரிவில் அதிகபட்சமாக 3 வீரர்களை களமிறக்க அனுமதிக்கப்பட்டது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: