மருத்துவமனையில் கங்குலி சகோதரர்

Spread the love

கோல்கட்டா: வயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேஹாசிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சினேஹாசிஷ் கங்குலி 53. பெங்கால் அணிக்காக 59 முதல் தரம் (2534 ரன்), 18 ‘லிஸ்ட் ஏ’ (275) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர்.

இந்த ஆண்டு துவக்கத்தில் இருதயத்தில் ஏற்பட்ட பிரச்னையால் ‘ஆஞ்சியோ’ செய்து கொண்ட சினேஹாசிஷ், நேற்று அதிகாலையில் வயிறு தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவரை கோல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது இவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவு ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை காண மனைவியுடன் லண்டன் சென்றுள்ள சவுரவ் கங்குலிக்கு, இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: