மம்தா பானர்ஜி உடை குறித்து பா.ஜ., தலைவர் சர்ச்சை பேச்சு| Dinamalar

Spread the love


கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, ‘பெர்முடாஸ்’ அணிந்துகொள்ளுமாறு, மாநில பா.ஜ., தலைவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுநாள் துவங்கி, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, காலில் காயத்துடன், சக்கர நாற்காலியில் இருந்தவாறு, பிரசாரம் செய்து வருகிறார்.

latest tamil news

இந்நிலையில், மம்தா குறித்து, மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மம்தா பானர்ஜி, காலில் கட்டு போட்டுக்கொண்டு, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தன் காலை, அனைவருக்கும் காட்டும் வகையில், அவர் புடவையை அணிந்து வருகிறார். இப்படி யாரும் புடவையை அணிந்து நான் பார்த்தது இல்லை.தன் கால்களை மக்களுக்கு காட்டவேண்டும் என்றால், அவர் எதற்கு புடவையை அணிகிறார்? அதற்கு பதிலாக, அவர், ‘பெர்முடாஸ்’ எனப்படும் அரைக்கால் டிரவுசரை அணிந்துகொள்ளவேண்டியது தானே. இவ்வாறு அவர் கூறினார்.

திலிப் கோஷின் இந்த பேச்சுக்கு, திரிணமுல் காங்., கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அக்கட்சியின் எம்.பி., மஹுவா மொய்த்ரா, டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:மம்தா பானர்ஜி அவர்களை, பெர்முடாஸ் அணியுமாறு மேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவர் கூறி உள்ளார். வக்கிர எண்ணத்துடன் பேசும் இந்த குரங்குகள், மேற்கு வங்கத்தில் வெற்றிகொள்ளப்போகிறோம் என எண்ணுகின்றன.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

AdvertisementSource link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *