மன உளைச்சலைக் குறைக்க சில வழிகள்…

Spread the love

வேலை, வாழ்க்கைச் சமநிலையைக் கட்டிக்காப்பது சிரமமாகும்வேளையில், நம்மில் பலர் மன உளைச்சலால் பாதிக்கப்படுகிறோம்.

அந்த மன உளைச்சல் பல்வேறு நோய்கள் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகலாம்.

அந்நிலையில், மன உளைச்சல் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள, நம்மால் முடிந்ததைச் செய்யவேண்டும்.

அதற்கு நம் தினசரி வாழ்க்கைமுறையில் சிறு சிறு மாற்றங்களைச் செய்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1. கைபேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது

இரவு தூங்குவதற்கு முன்பும், காலை எழுந்த பிறகும் கைபேசியை 1.5 மணி நேரத்திற்குப் பயன்படுத்தக்கூடாது. கைபேசித் திரைகளைப் பார்த்தால் மன உளைச்சல் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

2. நாளைச் சிறப்பான முறையில் தொடங்குவது
காலை எழுந்தவுடன், 15 நிமிடங்களுக்கு, உங்களுக்குப் பிடித்த சில செயல்களில் ஈடுபடலாம். உதாரணத்திற்கு, புத்தகம் படிப்பது அல்லது நேநீர் அருந்துவது. அவ்வாறு செய்வது நாளை நல்ல மனநிலையுடன் தொடங்க உதவும்

3. மின்னிலக்கக் கருவிகள் இல்லாமல் ஓய்வு எடுப்பது
பொதுவாக, அலுவலக நேரம் முழுதும் கணினித் திரைகளையே பார்க்கவேண்டும். அப்போது கிடைக்கும் 1 மணி நேர இடைவேளையில் கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

4. மதிய உணவை வெளியே சாப்பிடுவது

அலுவலகத்திலேயே மதிய உணவைச் சாப்பிடாமல், வெளியே சென்று சாப்பிடலாம். பசுமை நிறைந்த பூங்காவில் சாப்பிட்டால் கண்களுக்குக் குளிர்ச்சியும் மனத்திற்கு நிம்மதியும் கிடைக்கும்.
 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *