மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் விபத்து – வாகன சாரதி படுகாயம்

Spread the love

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் கிரவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர்  வாகனம் இன்று வியாழக்கிழமை (1) காலை 9.30 மணியளவில் குடை சாய்ந்து விபத்திற்குள்ளாகியதில் சாரதி படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டார்.

மதவாச்சி பகுதியிலிருந்து மன்னார் நகருக்குள் கிரவல் மண்  ஏற்றிக் கொண்டு சென்ற போதே குறித்த டிப்பர்  வாகனம் தள்ளாடி சந்தியில் வைத்து  கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து  விபத்துக்குள்ளாகியது.

இதன் போது குறித்த வீதியினால் பயணித்தவர்களினால் குறித்த டிப்பர் வாகன சாரதி மீட்கப்பட்டு காயத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *